Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடையில் இன்று முதல்…. 5 கிலோ அனல், 3 கிலோ தனல்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் சமையல் எரிவாயு பயன்பாட்டை கிராமப்புறங்களில் அதிகப்படுத்தக்கூடிய வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது நாடு முழுவதும் 5.32 கோடி ரேஷன் கடைகள் மூலம் படிப்படியாக விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டது. அதன்படி வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். இதற்கிடையில் வெள்ளகோவில் புதுவை ஊராட்சி கணேசன் புதூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாமை திருப்பூர் ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் அமைச்சர் நலத்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது சிறந்த கால்நடைகளுக்கான பாராட்டு சான்றிதழ், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை கொண்ட அனல் மற்றும் தனல் என்ற பெயர் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் 6‌ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது‌ ரேஷன் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 கிலோ எடையுள்ள LPG சிலிண்டர்கள் விற்பனையானது சிறு வணிகர்கள், தேருவோடு வியாபாரிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பின்னாலாடை மற்றும் எண்ணெய் ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவிகரமாக இருக்கும். இதனையடுத்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் LPG சிலிண்டர்களை பொறுத்தவரையில் முகவரிக்கான ஆதாரம் தேவையில்லை, அடையாளம் சான்று மட்டும் போதுமானது. தனல் என்றால் 2 கிலோ சிலிண்டர், அனல் என்றால் 5 கிலோ சிலிண்டர். பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்‌.

Categories

Tech |