உத்திரபிரதேச எம்எல்ஏ வை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் பிரபல ரவுடியாக இருந்து அதன் பின் அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. இவர் ஐந்து தடவை எம்.எல்.ஏவாக இருந்த இவர் மீது சுமார் 50 குற்ற வழக்குகள் இருக்கிறது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவரது மகனும் மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏவும் ஆன அப்பாஸ் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் அப்பாஸ் அன்சாரியிடம் பிரக்யாக்ராஜில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை அடுத்து விசாரணை முடிவில் நேற்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்குகள் தொடர்பாக முக்தார் அன்சாரிக்கு சொந்தமான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்க துறையினர் கடந்த மாதம் முடக்கிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உத்திரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.