உத்திரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் 40 வயது விவசாயி தன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிந்தார். அப்போது அவரை குரங்குகள் கூட்டம் விரட்டியதில் மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டார். அதாவது தன்னைத் தாக்கிய குரங்குகள் கூட்டத்திடமிருந்து காத்துக்கொள்ள முயற்சி செய்தபோது தவறுதலாக மொட்டைமாடியிலிருந்து விவசாயி விழுந்துள்ளார். இவர் முகேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனே பரேலி நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை மாலை இறந்தார். குரங்குகள் தாக்கியதில் முகேஷ்குமார் தன் சம நிலையை இழந்து விட்டார்.
அத்துடன் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் நாங்கள் முகேஷ்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், அங்கு அவர் காயங்களால் இறந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் உயிரிழந்த நபர் தற்செயலாக மொட்டைமாடியில் இருந்து தவறிவிழுந்தாரா (அ) குரங்குகளால் தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கோட்ட வன அலுவலர் சமீர்குமார் தெரிவித்தார்.