மிதிவண்டியில் சவப்பெட்டியை கொண்டு செல்லும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இசபெல் ப்ளூமேரா. இவர் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அதாவது அந் நாட்டில் மிதிவண்டி சவப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். இதன் மூலம் சவப்பெட்டியை இனி கையில் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
இந்த மிதிவண்டி சவப்பெட்டியில் சவத்தை வைத்துவிட்டு சைக்கிள் ஓட்டுவது போன்ற ஓட்டினால் சுலபமான முறையில் சவத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சேர்க்க முடியுமாம். மேலும் இந்த முறை டென்மார்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.