Categories
ஆன்மிகம் இந்து

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட சிறந்த வழிபாடு..!!

கடன் வாங்கிய பின்பு அதனை சுலபமாக அடைப்பதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது அதை பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம்..

நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்றால் திங்கட்கிழமைகளில் வாங்க வேண்டும். வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பித் தருவதன் மூலம் உங்கள் கடலானது வெகுவிரைவில் அடக்கப்படும். நீங்கள் வாங்கிய கடனை விரைவாக திருப்பித் தருவதற்கு சிவபெருமானை வழிபடவேண்டும்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் இந்த திருசேரை உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சந்நதியில் ருண விமோசனராய் சிவபெருமான் காட்சி அளிக்கின்றர் . ருண விமோசனர்  என்றால் கடனில் இருந்து நம்மை விடுவிப்பவர் என்பது அர்த்தம்.

அதற்காக இந்த ருணவிமோசனரை நினைத்து மார்க்கண்டேயன் இந்த தலத்தில் தவம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 16 வயது வரை மட்டுமே வாழ வேண்டிய மார்கண்டேயன் என்றும் பதினாறாக நித்ய சிரஞ்சீவியாக வாழ்ந்ததற்கு இந்த ஈசன் அருள் பாவித்துள்ளார். மார்க்கண்டேயரின் பிறவிக் கடனை அடைத்த இந்த ஈசன் நாம் பெற்ற கடனையும் சுலபமாக அடைத்துவிடுவார் என்கிறது வரலாறு.

திங்கள் கிழமைகளில் ருணவிமோசனருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நாம் முற்பிறவியில் செய்த கடனும், இந்தப் பிறவியில் வாங்கிய கடனும் தீரும் என்பது நம்பிக்கை.வசதி இல்லாதவர்கள் தான் கடன் வாங்குகிறார்கள் என்றால், வசதி படைத்தவர்கள் அதைவிட அதிக கடன் வாங்குபவர்களாக இருக்கிறார்கள்.

இந்த ருணவிமோசனரை வழிபட்டு அனைவரும் கடன் தொல்லையிலிருந்து நீங்கி கடன் இல்லாத வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் போதும். அதில் நமக்கும் கிடைக்கும் நிம்மதியானது வாழ்நாள் முழுவதும் நம்மை கடன் வாங்காமல் தடுத்துவிடும்.

கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களுக்கும் ஆசை உள்ளதா.? அனாவசியமான ஆசைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும்.. இதனால் நிம்மதியான உறக்கமும் ஆரோக்கியமான வாழ்க்கையும் நம்மால் வாழ முடியும்

Categories

Tech |