Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா…..? தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்….!!!!

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

அதோடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இந்தியாவில் 11-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை உற்பத்தி செய்வதில் பலவிதமான கட்டுப்பாடுகள் இருக்கிறது.

எனவே தமிழக அரசு பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்று பிறப்பித்த அரசாணையை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்குக்கு மதுபான கடைகளின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது. மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால் அரசு சொல்லும் முடிவுகளை மதுபான கடைகள் செயல்படுத்தி தான் ஆக வேண்டும்.

ஆனால் தற்போது வரை பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுபான கடைகளில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக கூறியதோடு பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவும் உறுதியளித்தது. இதன் காரணமாக நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Categories

Tech |