தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து கமலஹாசன் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சில இயக்குனரின் பெயர்கள் கூறப்பட்டது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கமல் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்பெஷல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு கமலஹாசன் தயாரித்து நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர். இந்த படத்தை சென்சேஷ்னல் இயக்குனர் எச். வினோத் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.