Categories
மாநில செய்திகள்

“52 டோல்கேட் ஊழியர்கள் பணிநீக்கம்”…. மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியா ஒன்றிய துணை அமைச்சர் வி.கே சிங்கிடம் எம்.பி திருமாவளவன் மற்றும் எம்பி ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 27 திட்டங்கள் ஆக பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அவுட்சோர்ஸ்  முறையில் டோல் பிளாசாக்களை துணை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் 10 முதல் 15 ஆண்டுகளாக பணிபுரிந்த ஊழியர்களை சட்ட விரோதமான முறையில் பணிநீக்கம் செய்துள்ளதால் அவர்கள் தொடர்ந்து தங்களுடைய குடும்பத்துடன் வேலை கேட்டு போராடி வருகிறார்கள். இவர்களை நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்ட தானியங்கி கட்டண வசூல் முறையை பயன்படுத்தி வேலை நீக்கம் செய்துள்ளனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள 56 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்க வேண்டும் என உதவி தொழிலாளர் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்ட போதிலும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை எம்/எஸ் திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் எம்/எஸ். SKM காண்ட்ராக்டர் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளது. இதனையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட 56 ஊழியர்களையும் உடனடியாக பணியில் அமர்த்தி சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் எம்பி அமைச்சருடன் விரிவாக பிரச்சனையை கூறியவுடன் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக கூறியுள்ளார்.

Categories

Tech |