Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு வில்லனாகும் வடிவேலு…. எந்த படத்தில் தெரியுமா….? புதிய தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் மொழியில் ரிலீசான என் ராஜாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். நடிகர் வடிவேலுவின் காமெடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். அதன் பிறகு இணையதளத்திலும் நடிகர் வடிவேலுவின் டயலாக்கை தான் மீம்ஸ்களாக போட்டு தெறிக்க விடுவார்கள்.

நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காமெடி கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த வடிவேலு முதன் முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் களம் இறங்குகிறார். இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் நடிகர்  ஜிவி பிரகாஷ் ஒரு புதிய படத்தில்  நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு மிரட்டலான மற்றும் கொடூரமான கொலைகாரனாக வடிவேலுவை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படத்தின் கதை வடிவேலுக்கு பிடித்து விட்டதால் கண்டிப்பாக அவர் ஓகே சொல்வார் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் இருக்கிறார்கள். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வில்லனாக நடிக்க இருக்கும் வடிவேலுவை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Categories

Tech |