இமாசலப்பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிம்லாவிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இமாசலப்பிரதேசத்தில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் 10 வாக்குறுதிகளை மாநில மக்களுக்கு அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாத உதவித் தொகை என்பது உட்பட 10 வாக்குறுதிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆளும் பா.ஜ.க அரசு, மாநில மக்களின் வாழ்க்கையை மிக மோசமாக மாற்றிவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 5 வருடங்களுக்கு முன் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தவர்கள் இப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளில் முக்கியமானவை குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.
# பழைய ஓய்வூதியம்முறை கொண்டுவரப்படும்.
# 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.
# பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய்.1,500 உதவித்தொகை.
# 300 யூனிட் இலவசமின்சாரம்.
# ஒவ்வொரு தொகுதியிலும் தலா 4 ஆங்கிலவழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகள்.
# அனைத்து கிராமங்களிலும் இலவச மருத்துவம்.
# மாட்டுச்சாணம் கிலோ ரூபாய்.2க்கு வாங்கிக்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.