Categories
தேசிய செய்திகள்

வரும் 7 ஆம் தேதி முதல்…. அதிகரிக்கும் பயணிகளின் வாகன விலை…. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு…..!!!!

வாகனத் தயாரிப்பில் முன்னணியிலுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தன் பயணிகள் வாகன விலையை வருகிற 7ம் தேதி முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது பயணிகள் வாகன விலையில் 0.9 % என்ற அளவில் இருக்கலாம் எனவும் கார்களின் மாடல்களைப் பொறுத்து அது மாறுபடும் எனவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.

முன்பே அதிகரித்து இருக்கும் உள்ளீட்டுச் செலவினங்களை இந்நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்போது ஒட்டுமொத்த உற்பத்திசெலவும் கடுமையாக அதிகரித்து இருப்பதால், இந்த குறைந்தபட்ச விலை உயர்வு எனும் நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ, பஞ்ச்,நெக்ஸான், ஹாரியெர், சபாரி உள்ளிட்ட கார் மாடல்களை நாடு முழுதும் விற்பனை செய்து வருகிறது.

Categories

Tech |