திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 2692 சிறப்பு பேருந்துகள் மூலம் 6500 நடைகள் இயக்கப்பட உள்ளன.மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல் நிகழ்வை விஐபிகள் தரிசனத்திற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.