தமிழகத்தில் கலந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும் இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.