மத்திய காவல் படை காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய ஆயுத காவல் படையில் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, டெல்லி காவலின் மத்திய ஆயுத காவல் படை, சிறப்பு பாதுகாப்பு படை, அசாம் ரைபிள் போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக இணைய வழி தேர்வு 2023 ஆம் வருடம் ஜனவரியில் நடத்தப்பட இருக்கிறது.
இந்த பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கர்நாடகம், கேரளா மண்டலங்களை சேர்ந்தவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் எஸ்சி, எஸ்டி முன்னாள் ராணுவ வீரர்கள் மகளிருக்கு அனைத்து பிரிவுகளின் தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளங்கள், 080 25502520, 9483862020 போன்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.