பட்டாசு தயாரிப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழலை மாசடைகின்றது என்ற வழக்கு கோபால் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தார்கள். அதேபோன்று பட்டாசுக்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதால் இந்தியாவில் பட்டாசு நிலை உருவாகி வந்த சூழல் உருவாகியது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் , தமிழகத்தில் சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் சிவகாசி மக்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்ற வாதங்களை முன்வைத்து. மத்திய அரசும் இதை வலியுறுத்தியதால் பட்டாசு உற்பத்தி சென்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு , மாசுக்கள் இல்லாத பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் , உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மிக முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதில் சில பார்முலாக்களை மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அறிவியல் அமைப்புகள் இணைந்து உருவாக்க வேண்டும். அந்த பார்முலாவின் அடிப்படையில்தான் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுக்கள் சரிவர உற்பத்தி செய்யப்படவில்லை. அதில் நிறைய முறைகேடுகள் நடக்கிறது என்ற ஒரு குற்றச்சாட்டு வாதமாக முன்வைக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பசுமை பட்டாசு தயாரிக்கக்கூடிய மூலப் பொருட்களில் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றவா ? உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை மீதி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றவா ? என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று சென்னை சிபிஐ இணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் விசாரணை தொடர்பான ஒரு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவுகளை பிறப்பித்து ள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த பட்டாசு ஆலை நிறுவனங்கள் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதா ? பசுமை பட்டாசுக்கள் தயாரிக்கும் போது என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார்கள். எந்த அளவிற்கு மோசமாக உள்ளது. இதனால் கேடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரிவான அறிக்கையாக 6 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.