Categories
சினிமா தமிழ் சினிமா

“வருஷத்துக்கு 365 நாளும் விளம்பரத்தை தேடும் தல அஜித்”….. ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் கொந்தளித்த ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் ஜி.எம் சுந்தர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் தங்களுடைய டப்பிங் வேலையை முடித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என்பது காலம் காலமாகவே இருக்கும் ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் அஜித்தின் மேனேஜர் ஒரு நல்ல படத்திற்கு விளம்பரமே தேவையில்லை என்று பதிவிட்டார். இதை தற்போது ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அதாவது ஒரு நல்ல படத்திற்கு விளம்பரமே தேவையில்லை என்று கூறிவிட்டு வருடத்திற்கு 365 நாளும் புகைப்படத்தை போட்டு விளம்பரம் தேடுவது சரியா என்று அஜித்தை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு விளம்பரமே தேவையில்லை என்று கூறி போட்டோ போடுவதற்கு பதிலாக ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இயக்குனர்கள். தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களும் சந்தோஷப்படுவார்களே என்றும் கூறியுள்ளார். இந்த விமர்சனத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் அஜித் மீது இருக்கும் பாசத்தால் வேறு சிலர்  தான் புகைப்படத்தை வெளியிடுகின்றனர் என்று கூறுகிறார்கள். மேலும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தினால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் மீம்ஸ் போட்டு மோதி கொள்கிறார்கள்.

Categories

Tech |