Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை திரிஷாவுக்கு என்னாச்சு”….. இவ்வளவு பெருசா கட்டு போட்டு இருக்காங்களே…. போட்டோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது கட்டுப் போட்டுள்ளார். இதை த்ரிஷா ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டு வெக்கேஷன் கேன்சல் ஆகிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஐயோ! செல்லத்துக்கு என்ன ஆச்சு என்று பதிவிட்டு வருகின்றனர். அதோடு சிலர் வடிவேலு ஸ்டைலிலும் கமாண்டுகளை பதிவிட்டு எமோஜிகளை பறக்க விடுகின்றனர். மேலும் த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |