Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு 142 ரன்கள் இலக்கு…. கட்டுப்படுத்துமா இலங்கை?…. அரையிறுதிக்கு செல்லுமா ஆஸி?

சூப்பர் 12 கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இலங்கை 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதி வருகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். அதே சமயம் தோல்வியடைந்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதி.

எனவே ஆஸ்திரேலியா ரசிகர்கள் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் இருவரும் களமிறங்கினர்.. இருவரும் நன்கு தொடங்கிய நிலையில் குசால் மெண்டிஸ் 18 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த தனஞ்செயா டி சில்வா 9, அசலங்கா 8 என சீரான இடைவெளியில்  விக்கெட்டுகளை விட்டனர். 10.4 ஓவரில் இலங்கை 84/3 என இருந்தது.

இதையடுத்து நிசாங்காவும் ராஜபக்சேவும் ஜோடி சேர்ந்தனர். நிசாங்கா சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அதன் பின் 45 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 67 ரன்கள் எடுத்திருந்த நிசாங்கா 16 வது ஓவரில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து 18ஆவது ஓவரில் தசுன் ஷானகா 3 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து  மார்க் வுட்  கடைசி ஓவரில் ராஜபக்சே (22) ரன் அவுட் ஆனார். மேலும் அந்த ஓவரில் 5 ரன் மட்டுமே கொடுத்து ஹசரங்கா 9, கருணாரத்னே ஆகியோரை அவுட் செய்தார் வுட். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் துவக்க வீரர் நிசாங்காவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர். கடைசி நேரத்தில் இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியதால் 20 – 30 ரன்கள் குறைவாகவே எடுத்தது இலங்கை அணி.. இங்கிலாந்து அணியில் மார்க் வுட் 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் 1, பென் ஸ்டோக்ஸ் 1,சாம் கரன் , அடில் ரஷீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.இதையடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.

 

Categories

Tech |