Categories
தேசிய செய்திகள்

“தொடர்ந்து மோசமாகும் காற்று தர குறியீடு”….. வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை….. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

டெல்லியில் சமீப காலமாகவே காற்றின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. காற்று  தர குறியீட்டு அளவானது மோசமடைந்து வருவதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இங்கு இன்று நிலவரப்படி இருக்கும் காற்று  தர குறியீடு குறித்த தகவலை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுதும் காற்று தர குறியீடு ஆனது 431 ஆக இருக்கிறது. அதன் பிறகு உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டா பகுதியில் காற்று தர குறியீடானது 529 ஆகவும், அரியானாவில் உள்ள குரு கிராம் பகுதியில் 478 ஆகவும், தீர்ப்பூர் பகுதியில் 534 ஆகவும் காற்று தர குறியீடு இருக்கிறது.

அதன் பிறகு தற்போது டெல்லியில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், அதிகாலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்கள் அனைத்துமே மெதுவாக செல்கிறது. இந்நிலையில் உலக அளவில் உள்ள காற்று தர குறியீடு அமைப்பானது ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் உள்ள டாப் 10 பட்டியலில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி இடம்பெறவில்லை.

இருப்பினும் இந்தியாவில் உள்ள 8 நகரங்கள் அதிக காற்று தர குறியீடு பட்டியலில் இடம் பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால் தான் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகையின் போது அதிக மாசுபாடுடைய நகரங்களில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் டெல்லி உட்பட வட மாநிலங்களில் காற்று தர குறியீடு அளவானது மோசமடைந்துள்ளதால் எச்சரிக்கை அறிவிப்பு விடபட்டுள்ளது ‌

Categories

Tech |