Categories
உலக செய்திகள்

சீனாவால் அனுப்பப்பட்ட ராக்கெட்…. பசிபிக் பெருங்கடலில் விழுந்த பாகங்கள்…!!!

சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்ட 23 ஆயிரம் கிலோ எடை உடைய ராக்கெட்டினுடைய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டின் கட்டுமான பணியில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்குரிய என்னும் உபகரணங்களின் தொகுதியை எடுத்துச் செல்ல சுமார் 178 அடிகள் நீளம் மற்றும் 23 ஆயிரம் கிலோ எடையில் ராக்கெட் ஒன்று கடந்த மாதம் 31ம் தேதி அன்று விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அது புவியின் வட்ட பாதையில் புகுந்து உபகரணங்களை அனுப்பியது.

அதனைத்தொடர்ந்து ராக்கெட்டின் மீதம் இருக்கும் பாகங்கள் பூமியை மீண்டும் வந்தடைந்திருக்கிறது. ஆனால் பூமியின் எந்த இடத்தில் சரியாக இந்த ராக்கெட் விழும் என்பதை சீனா உறுதிப்படுத்தவில்லை. வழக்கமாக இது மாதிரியான ராக்கெட்டுகள் பூமிக்கு மீண்டும் வரும்போது வளிமண்டலத்தில் சாம்பல் ஆகிவிடும்.

இந்நிலையில், ராக்கெட்  வளிமண்டலத்திற்கு புகுந்து, தெற்கு மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் விழுந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Categories

Tech |