சன் டிவி மற்றும் விஜய் டிவிகளில் ஒளிபரப்பான சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் அர்னவ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திவ்யா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கடந்த 5 வருடங்களாக லிவிங் டூ கெதரில் இருந்த திவ்யா மற்றும் அர்னவ் திருமணம் செய்து கொண்ட நிலையில், செல்லம்மா தொடரில் நடித்து வரும் ஹர்ஷிதாவுக்கும் அர்னவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறி திவ்யா மற்றும் அர்னவுக்கிடையே பிரச்சனை பூகம்பமாய் வெடித்தது.
இந்த பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல அர்னவ் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்த நடிகர் அர்னவ் மீண்டும் செல்லமா சீரியலிலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை அர்னவ் தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் “காதலோடு வாழும் வாழ்க்கை ஒருபோதும் சலிக்காது” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் சீரியலில் கம்பேக் கொடுத்த தகவலையும் கூறியுள்ளார்.