Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சுவரை இடிக்காமல் இப்படி செய்யுங்கள்” வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராமாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதனை அறிந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி அலுவலக சுற்றுச்சுவரை இடிக்க விடமாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுற்றுசுவரை இடிக்காமல் அதற்கு மாறாக மாற்று வழி ஏற்படுத்துவதன் மூலம் அனைவரும் எளிமையாக சென்று வரலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அந்த இடத்தில் மாற்று வழி ஏற்படுவதற்காக அளவீடு செய்து வருகின்றனர்.

Categories

Tech |