Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டு பிரதமர் ஃபிட்டாக இருக்க…. இதுதான் காரணமா….? டயடின் ரகசியம் இதோ….!!!!

பிரிட்டன் நாட்டு பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்று தனது பணிகளை செய்து வருகின்றார் ரிஷி சுனக்.

பிரிட்டன் நாட்டு பிரதமரான ரிஷி சுனக் தினமும் காலையில் எத்தனை மணிக்கு எழுவார், அவர் காலை உணவாக என்ன சாப்பிடுவார் மற்றும் அவர் டயட் ரகசியங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியன. இது குறித்து அவர் கடந்தாண்டு podcast நிகழ்ச்சியில் கூறியதாவது. “நான் காலை 6-7 மணிக்குள் எழுந்திருக்கிறேன் என்றார். பின்னர் தனது வொர்க்அவுட் முறையையும் தனது உடல் வடிவத்தை எவ்வாறு பராமரிக்கின்றார் என்பது பற்றியும் கூறியுள்ளார். அதாவது உடற்பயிற்சி  கூடத்தில் பெலட்டனின் ஒரு அமர்வு, டிரெட்மில்லின் ஒரு அமர்வு போன்ற உடற்பயிற்சிகளை செய்வேன்.

பின்னர் டயட்டை பொறுத்தவரை ரிஷி சுனக் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றுவேன். அதாவது விரதத்துக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்வது தான் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் எனப்படுவதாகும். அதன்படி பல நாட்கள் காலை உணவை தவிர்க்கும் ரிஷி மற்ற நாட்களில் Greek yoghurt, blueberries, Gail’s cinnamon bun போன்ற உணவுகளை சாப்பிடுவேன். பின்னர் வார இறுதியில், சனிக்கிழமைகளில் முழுமையாக சமைத்த உணவுகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், நாங்கள் pancakes மற்றும் waffles மாறி மாறி சாப்பிடுவேன்” என்று அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |