இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “நீ எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்து இருக்கின்றாய் என்பது தெரியும். உன் வெற்றியில் எப்போதும் சிந்துவின் பங்கு இருக்கும். இனி நீ பிற போகும் அனைத்து வெற்றிகளிலும் உயரத்திலும் சிந்து கூடவே இருப்பார்கள்” எனக் கூறியிருக்கின்றார். இதைக் கேட்ட அருண்ராஜா காமராஜ் மேடையிலேயே உடைந்து போய் அழுதார். இந்த நிலையில் தற்போது இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.