நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி பாடகி ஆகியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகர் வலம் வரும் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. இவர் தற்போது குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வருகின்றார். இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகவும் பிரபலமடைந்தார்.
இதன் பிறகு தர்பார், எனிமி, சித்திரை செவ்வானம், மாமனிதன், மகா, பட்டாம்பூச்சி, தி லெஜெண்ட், கண்மணி பாப்பா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது பத்து தல, ஒன் டூ ஒன், கும்கி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் பாடகியாகவும் மாறியுள்ளார். இவரின் தந்தையான கொட்டாச்சி இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ரோஷன் மாத்யூ இசையமைக்கின்றார். இவரின் இசையில் மானஸ்வி வி.எம்.மகாலிங்கத்துடன் சேர்ந்து பாடி இருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.