தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், வேலாயுதம், வாலு, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா கொடிகட்டி பறக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலன் சோகேலுடன் இருக்கும் புகைப்படத்தை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டு தன்னுடைய திருமணத்தை உறுதிப்படுத்தினார்.
இந்த சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். அவரின் முதல் மனைவி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி ரிங்கிதான். சோஹைல் – ரிங்கி திருமணத்தில் ஹன்சிகா டேன்ஸ் ஆடிய கொண்டாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.