Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்கள் ரத்து…. நேரம் திடீர் மாற்றம்….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் நவம்பர் 18, 19, 21 , 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.கோவை மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சென்னை மற்றும் குருவாயூர் விரைவு ரயில் நவம்பர் 22, 25, 26 ஆகிய மூன்று நாட்களும் தாமதமாக நெல்லை வந்தடையும். மேலும் நவம்பர் 30ம் தேதி மதுரை மற்றும் செகந்திராபாத் சிறப்பு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரயில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு காலை 7.10 மணிக்கு உடுமலை ரயில் நிலையத்திற்கு சென்றடையும். தயிர் பாதை பராமரிப்பு பணிகளுக்காக திருச்செந்தூர் செல்லும் ரயில் வருகின்ற 18 , 19 , 21, 22 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |