தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என அமைச்சர் அன்பில் மகெஷ் கூறியுள்ள நிலையில், போட்டித் தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள் நவம்பர் 3ஆவது வாரத்தில் இருந்து தொடங்கப் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம். இந்த ஆண்டுக்கான பயிற்சிகள் நவம்பர் 3ஆவது வாரம் தொடங்கும் என பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்