இந்த மூன்று பழங்களை மட்டும் இந்த கோடையில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே கிடைத்துவிடும்.
பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் கோடை காலங்களில் தினமும் பழங்கள் சாப்பிடுவது மிக அவசியம். அதே சமயத்தில் நாம் சாப்பிடும் பழங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாக இருப்பது நல்லது. இந்த வகையில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே அதிகரிக்கும்.
பொதுவாக கோடையில் அதிக வெப்பத்தால் சருமம் அதிகளவில் பாதிக்கப்படும். உடல் சூடு சம்பந்தமாக அம்மை நோய், மஞ்சள் காமாலை என்று பல நோய்கள் தாக்க தயாராக இருக்கும். இந்த நோய்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தான் முதலில் அதிகம் தாக்கும். ஆனால் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வந்தால் இதை பற்றிய பயம் நமக்கு தேவையே இல்லை.
அந்த வகையில் அனைவரும் வாங்க கூடிய விலை மலிவான 3 சிட்ரஸ் பழங்களை பற்றி பார்ப்போம்..
1.எலுமிச்சை:
எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் நிரம்பி வழியும் விட்டமின் சி உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது. சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் செயல்படுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். அதுமட்டுமல்ல தினமும் லெமன் ஜூஸ் சாப்பிட்டால், நம்முடைய சருமம் பளபளப்பாக மாறி உடலுக்கு நல்ல பொலிவைத் தரும்.
மேலும் தோலில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைய செய்யும். அதேபோன்று காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை கூண்டோடு அழிக்கும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். முக்கியமாக உடல் எடையை குறைக்கும்.
பொதுவாக காலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுது நம்முடைய வாய் மிக வறட்சியாக இருக்கும். அந்த சமயங்களில் தான் உடலிற்கு நீர் உற்பத்தி அதிகரிக்கும். அதனால் தான் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்லது. அதேபோன்று வெளியூர் பயணத்தின் பொழுது பாட்டில் தண்ணீரை, செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து எலுமிச்சை ஜூஸ் கையோடு கொண்டு செல்வது நல்லது.
இதனால் சிறுநீரக தொற்று ஏற்படாமல் இருக்கும். மேலும் இந்த லெமன் ஜூஸ் சிறுநீரை அதிகரித்து நச்சுக்களை வெளியேற்றுகிறது.குறிப்பாக கோடை காலத்தில் உடல் சூடாகும் இதற்கு எலுமிச்சை கலந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து சிறுநீரக தொற்று ஏற்படாமல் தடுக்கவும் முடியும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.
அதேபோன்று எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர் நாற்றம், பல்வலி, ஈறுகளில் ரத்தம் வருதல் போன்ற பாதிப்புகளை சரிசெய்யும். அதேபோன்று பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால் எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல் போஸ்டட் மற்றும் மார்பக தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.
2.ஆரஞ்சு பழம்:
கோடையில் ஆரஞ்சு ஜூஸை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதல் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். பழங்களில் வைட்டமின் சி தவிர சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. இவை எந்த வித புற்றுநோயையும் தடுக்க கூடியது. மேலும் முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்களை நீக்கும். முகம் சுருக்கம் அடையாமல் அழகிய பொலிவான சருமத்தை பெற முடியும்.
மேலும் அதிக தாகத்தைத் தணிக்கும். வாய் நாற்றத்தைப் போக்கும். உடல் வறட்சியை நீக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். தலைச் சுற்றல் நீங்கும். அதேபோன்று இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையும் குறைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் நார்ச்சத்து உடலில் தேவையற்ற கொழுப்பை குறைப்பதோடு, மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது.
இதில் அதிக அளவு பொட்டாசியமும் நிறைந்துள்ளது. இந்த பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஆரஞ்சு சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். அதேபோன்று இதிலுள்ள விட்டமின் சி விரைவில் முதுமை அடைவதை தடுக்கும். இதேபோன்று சிட்ரிக் அமிலம், நம் உடலின் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்துகிறது.
முக்கியமாக ஆரஞ்சு பழத்தில் விலை அதிகமான பழங்களும் உள்ளன. ஆனால் விலை மலிவான கமலா ஆரஞ்சும் இதில் அத்தனை நன்மைகளும் கிடைக்கும்.
3.சாத்துக்குடி ஆரஞ்சு:
ஆரஞ்சு பழம் போலவே சாத்துக்குடியில் நன்மைகளும் கிடைக்கும். விட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மேலும் இதில் கலோரிகள் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் மிக குறைவு. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாத்துக்குடி உரித்து சாப்பிட்டு வந்தால். வயிறு நிறைவதோடு வேறு நொறுக்குத் தீனிகளின் மீது நாட்டம் செல்லாது.
சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது. விளையாட்டு வீரர்களுக்கு தசை வலுப்பெறுவதுடன், நோயாளிகள் நோயில் இருந்து மீண்டு வருவதற்கும் சாத்துக்குடி மிகவும் நல்லது. அது போன்று மஞ்சள் காமாலையின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழமும் இதுதான். முக்கியமாக உடலில் கல்லீரல் தான் பல முக்கியமான பணிகளை செய்து வருகிறது.
எனவே கல்லீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவது நல்லது. அதே போன்று இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த நாளங்களில் கொழுப்புகள் தேங்குவதை தடுத்து, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
பொதுவாக இது மூன்றுமே சிட்ரஸ் பழங்கள் என்பதால் இவற்றின் பலன்களும் ஒரே மாதிரியான நன்மைகளைத் தரக்கூடியது. முக்கியமாக சிட்ரஸ் பழங்களை அடிக்கடி பயன்படுத்தி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிலும் மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. அதனுடைய தோலை காயவைத்து அரைத்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.