ஈரான் நாட்டை நாம் நிச்சயம் விடுவிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் பேசியிருந்தார்.
ஈரான் நாட்டில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. அதே சமயம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் ஜனநாயகக் கட்சி தொடர்பான போராட்டம் ஒன்றில் பங்கேற்று கூறியதாவது “நாம் ஈரானை நிச்சயம் விடுவிப்போம். தற்போது ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள், விரைவில் அவர்களே அவர்களை விடுவித்துக் கொள்வார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜோ. பைடனின் இந்தக் கருத்துக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி கூறியதாவது, “ஈரான் நாடு 43 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை அடைந்துவிட்டது. கடந்த 1979-ஆம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் ஈரான் நாடு தன்னை விடுவித்துக் கொண்டது என்பதை அமெரிக்க அதிபருக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்று பதிலளித்துள்ளார்.