திருப்பூர் அருகே உடுமேலை பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய குட்டி யானையை வனத்துறையினர் காப்பாற்றி தாய் யானையுடன் சேர்த்தனர்.
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் குடிக்க வந்த நான்கு மாத குட்டியானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்தது. குட்டி யானை கத்தும் சத்தம் கேட்கவே அங்கு சென்று அப்பகுதி மலைவாழ் மக்கள் பார்த்த்துள்ளனர். அவர்கள் முயற்சி பலனற்று போகவே வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையின் பலமணி நேரம் போராடி குட்டியை காப்பாற்றினார். மேலும் அந்த குட்டி யானைக்கு தேவையான சிகிச்சை குளுகோஸ் ஆகியவற்றை கால்நடை மருத்துவர்கள் அளித்தனர். பின்னர் வனத்துறையினர் தாய் யானை இருக்கும் இடத்திற்கு அருகே குட்டி யானையை கொண்டு சென்றுவிட்டனர். அப்போது தாயை பார்த்த குட்டியானை மகிழ்ச்சியுடன் ஓடிய காட்சி காண்போரை மெய்சிலிக்க வைத்தது .