Categories
மாநில செய்திகள்

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டும் உயர்ந்தது ஏன்…? விளக்கம் அளித்த அமைச்சர் நாசர்…!!!!!

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டும் உயர்ந்தது என்பதற்கு அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு 12 ரூபாயாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமைச்சர் நாசர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, வணிகரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பால் விற்பனை விலை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத், கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் குறைவாக இருக்கிறது.

இந்த நிலையில் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் போன்றவற்றின் விலையில் மாற்றம் இல்லாமல் தற்போதைய நிலையே தொடர்கிறது. தற்போதுள்ள நிறை கொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எந்தவித விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டருக்கு 46 ரூபாய்க்கு புதுப்பிக்கப்படும். மேலும் நிறைகொழுப்பு பால் மக்கள் 40 சதவீதம் வணிக ரீதியாக 60 சதவீதமும் பயன்படுத்தி வருகின்றனர். பொதுநலன் கருதி முதல்வர் மு க ஸ்டாலின் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து இருந்தார் என அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |