ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார்.
பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. தற்போது ரிலீசாக உள்ள இந்த படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சன்னி லியோன் பேசியுள்ளதாவது, உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும் அன்பும் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்திருக்கின்றோம். இப்படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கனவை நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். உங்களது அன்பு ஆதரவும் எங்களுக்கு தேவை எனக் கூறியுள்ளார்.