அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தல் வருகின்ற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது. நடைபெறும் தேர்தலின் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால் அது நமது நாட்டில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.
இதனையடுத்து தேர்தல் அன்று அரசியல் வன்முறைக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மேலும் முன்னால் ஜனாதிபதி டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் பொய்களை பரப்பி வருகிறார்கள். ஏனென்றால் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றது என்று டிரம்ப் சொல்வது ஒரு பெரிய பொய் தான். மேலும் 82 வயதான சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், நாடாளுமன்ற தாக்குதலுக்கும் காரணம் அதுதான் என அவர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியரசு கட்சியின் மூத்த தலைவர் கெவின் மகா மெக்கார்த்தி கூறியதாவது. ஜனாதிபதி பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.ஏனென்றால் அவர் தனது விலைவாசி உயர்வுகளுக்கு வழிவகுத்த தனது கொள்கைகள் பற்றி அவரால் பேச முடியாது என கூறியுள்ளார்.