மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே இல்லத்தரசிகளுக்கு கொஞ்சம் கஷ்டமாகி போய்விடும். ஏனென்றால் மழைக்காலங்களில் துணிகளை துவைத்து காய வைப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்கள் மழை காலத்தில் அதனுடைய தன்மையிலிருந்து மாறும். இவ்வாறு மழைக்காலங்களில் தங்களுடைய வீட்டில் உள்ள பொருட்களை எளிதில் பராமரிப்பதற்கு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம். மழை காலத்தில் ஜன்னல் கதவுகள் திறக்க முடியாமல் இறுகி கொள்வது வழக்கம்.
அவ்வாறு நேரும் பொழுது கோலமாவோடு உப்புத்தூள் கலந்து ஜன்னல் விழும்பில் தூவினால் ஜன்னலை எளிதாக திறக்க முடியும். அதேபோல் மழைகாலத்தில் உப்பு ஜாடியில் ஈரம் கசியும். இவ்வாறு ஈரம் கசியாமல் இருப்பதற்கு இரண்டு மூன்று பச்சை மிளகாய்களை ஜாடியினுள் போட்டு வைப்பது நல்லது. ஈரப்பதத்தின் காரணமாக தீப்பெட்டி நமத்து போயிருந்தால் அரிசி மாவை பூசி பின் குச்சியை உரசினால் தீப்பற்றிக் கொள்ளும்.