Categories
மாநில செய்திகள்

“ஓபனிங் ரொம்ப நல்லாவே இருக்கு”…. ஆனா முடிவு தான் எப்படி இருக்க போகுதோ…..? திமுகவுக்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனம்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றதால் அந்த இடங்களில் தண்ணீர் வடிந்து விடுவதால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையாத இடங்களில் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதோடு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியினை ஓய்வு பெற்ற திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும் திமுக ஆட்சியாளர்கள் ராட்சச குழாய்கள் மூலமாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்‌. இதனால் மழை அதிக அளவில் பெய்யும் போது கூட திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் வைக்கப்படவில்லை. அதோடு வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து சில சமூக ஆர்வலர்கள் மழை குறித்து கூறும்போது, கடந்த 4 நாட்களாக பெய்யும் மழையில் இருந்து சென்னை காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 2 மாதங்களுக்கு மழை பெய்யும் என்பதால் டிசம்பர் வரை நிம்மதியான மனநிலைக்கு வர முடியாது. மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட இடங்களில் பிரச்சனை இல்லை என்றாலும், அமைக்கப்படாத இடங்களில் மற்றும் நிறைவடையாத இடங்களில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும். கழிவுநீரை அகற்றும் பணியும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது‌.

சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக சென்னையில் மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே இருப்பதால் தண்ணீர் தேங்கி, விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் பருவமழை முடிந்த பிறகு சாலைகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |