சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் பயணம் 10-ல் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பண்டிகை காலம் முடிந்த நிலையில் சென்டிரல், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் பத்து ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.