சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பொதுவிநியோகத் திட்ட கடைகளை ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “இச்செயலி வாயிலாக ஒவ்வொரு மாதமும் நியாய விலைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக மக்களுக்கு சிறந்தசேவையை அளிக்க இயலும்.
சென்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இதன் மூலமாக 1,12 534 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் 2,16,000 மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நியாயவிலை கடைகளில் 98.3 % பேர் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். திருவல்லிக்கேணி , அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் வாயிலாக பொருட்கள் விநியோகிக்கபட்டு வருகிறது. விரைவில் இதை தமிழகம் முழுதும் செயல்படுத்த முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.