Categories
தேசிய செய்திகள்

விரைவில் கோவிட், இன்ஃப்ளூயன்சா நோய்களுக்கான ஒற்றை தடுப்பூசி!…. வெளியான தகவல்…..!!!!

கோவிட், இன்ப்ளூயன்சா ஆகிய இரண்டு நோய்களுக்குரிய ஒற்றைத்தடுப்பூசி, எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டது. அமெரிக்க நாட்டில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி, தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டதாக ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.  இந்த இரண்டு சுவாச நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய்த் தடுப்பு நடைமுறைகளை எளிதாக்கலாம் என்று அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான ஃபைசரின் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் அன்னலீசா ஆண்டர்சன் கூறினார்.

தற்போது உள்ள பருவ கால இன்ப்ளூயன்ஸா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டாலும், இன்ப்ளூயன்ஸா வைரஸின் சுமையானது உலகம் முழுதும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக வருடந்தோறும் ஆயிரக்கணக்கான இறப்புகள் ஏற்படுகிறது. இதனிடையில் கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடுவதற்குரிய மிகவும் பிரபலமான தடுப்பூசிகளில் ஒன்று பைசர் ஆகும். அதேபோன்று தடுப்பூசி தயாரிப்பாளர்களான மாடர்னா மற்றும் நோவாவாக்ஸ் போன்றவை காய்ச்சல், கோவிட் தடுப்பூசிகளை தயாரித்து ஒன்றாக சோதித்துள்ளது.

Categories

Tech |