பாகிஸ்தான் நாட்டில் வித்தியாசமான முறையில் மலர்ந்த காதல் கதையானது இப்போது வைரலாகியுள்ளது. அதாவது, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அவரின் கார் ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஓட்டுநரை திருமணம் செய்தது என்பதை விட அதற்கான காரணம் தான் அனைவரையும் வியப்படைய வைத்தது. இது தொடர்பாக அப்பெண்மணி கூறியதாவது “என் முன்னாள் கார் ஓட்டுநர் இன்னாள் கணவராகி இருக்கிறார். அவர் எனக்கு கார் ஓட்டுவதற்கு கற்று கொடுத்தார்.
இந்நிலையில் அவர் காரின் கியர் மாற்றும் ஸ்டைலில் நான் மயங்கி விட்டேன். அத்துடன் அவர் மிக அழகாக, ரசனையான முறையில் கியரை மாற்றுவார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கியர் மாற்றும் ஸ்டைல் அவரின் கரத்தை பிடிக்கவேண்டும் என என்னை தூண்டியது. இப்போது அவரை கரம்பிடித்து விட்டேன்” என்று கூறினார். தற்போது இரண்டு பேரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவரின் கணவர் சிரித்துக் கொண்டே அந்த கார் இப்போது திருடுபோய் விட்டது என வேடிக்கையாக கூறினார்.