Categories
சினிமா தமிழ் சினிமா

கணவன்-மனைவி சந்தோஷமா வாழணுமா?.. அப்போ அவங்க ஆலோசனையை கேட்காதீங்க!… நடிகை ராதிகா ஆப்தே அட்வைஸ்…..!!!!

தமிழில் கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் ராதிகா ஆப்தே. இவர் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் அவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இந்நிலையில் தம்பதி மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில் ”நானும் என் கணவர் பெனடிக்ட்டும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்துகொண்டே அவரவர் உலகத்தில் சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் கணவன்- மனைவி (அ) காதலன்-காதலி இருவர் இடையில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டால் 3ம் மனிதரின் ஆலோசனையை பெறக்கூடாது. அது காதல் மற்றும் இல்லறவாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். அவ்வாறு 3ம் மனிதர் ஒருவரை நாம் எப்போது வரவேற்கிறோமோ அப்போதே உங்களது உறவில் விரிசல் ஆரம்பமாகி விட்டது என கூறலாம்.

நம் கணவர் (அ) காதலரை நம்மைவிட யாரும் நன்றாக புரிந்திருக்க முடியாது. அப்படி இருக்கும் போது நம்வாழ்க்கையில் நமது பிரச்சினையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவற்றில் 3ம் மனிதரின் பிரவேசம் நடக்கும் போது கண்டிப்பாக அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கிதான் செல்லும்”  என்று பேட்டியளித்தார்.

Categories

Tech |