Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு…. போராட்டத்தில் நடந்தது என்ன….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்டமான பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை விசாரித்தபோது அவர் கூறியதாவது, “நாட்டு  மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றார். அதனால், இம்ரான் கானை கொல்லும் நோக்கத்துடன் வந்தேன்” என அந்நபர் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனடியாக விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த ஆசாத் உமர் மற்றும் மியான் அஸ்லாம் இக்பால் ஆகியோர் கூறியதாவது, “சிறிது நேரத்திற்கு முன்பு இம்ரான் கான், இந்த விவகாரம் பற்றிய அறிக்கையை அவரது சார்பில் வெளியிடும்படி எங்களிடம் கூறியுள்ளார். அதன்படி, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் 3 பேரால் நடத்தப்பட்டுள்ளது என அவர் நம்புகிறார். அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் என கூறியுள்ளார்.

இம்ரான் கான், தனக்கு தகவல் வந்துள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே கூறினேன் என்றும் எங்களிடம் கூறினார் என இருவரும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் நியமனம் விவகாரம் தொடர்பாகவும், பிரதமர் ஷெரீப்புக்கு எதிராக தொடர்ந்து சில நாட்கள் இம்ரான் கான் அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில், பேரணியில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி பெண் நிருபர், இம்ரான் கானின்  வாகனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளர். இதனை தொடர்ந்து பேரணி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்,  துப்பாக்கி சூடு சம்பவத்தில் இம்ரான் கான் காயமடைந்துள்ளார்.

Categories

Tech |