தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதாவது இந்து கடவுள்களை மோசமான முறையில் சித்தரித்து இருப்பதாக பாஜக மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நடிகர் பிரபாஸ் உட்பட குழுவினருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் ஜனவரி மாதம் 12-ம் தேதி ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததாலும், வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தோடு மோதுவதற்கு விரும்பாததாலும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வருடம் மே மாதத்தில் ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிகர் சைப் அலிகான் ராமனாகவும், நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.