Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் – அமித்ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு! 

டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நடந்து வருகிறது. 

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த 23ம் தேதி சிலர் பேரணியில் ஈடுபட்டனர். 

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக  வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த கருத்தை வலியுறுத்தி நேற்று நாடாளுமற்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று காலை அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |