புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான twitter நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை இந்திய மதிப்பில் 352000 கோடிக்கு எல்லாம் மஸ்க் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனே அதன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் ட்விட்டர் மதிப்பீட்டு குழு அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த சூழலில் தற்போது twitter நிறுவனத்தின் பணியாளர்களை பாதியாக குறைக்க அவர் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 7,400 பணியாளர்களில் 3,700 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது முன்னதாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையும் அவர் திரும்ப பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.