Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கலப்பட கருப்பட்டி… “450 கிலோ வேம்பார் கடலில் கரைப்பு”..!!!!

கலப்படம் செய்யப்பட்ட 450 கிலோ கருப்பட்டி கடலில் கரைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம் பகுதியில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக மினி வேனில் சிலர் வேம்பார் பகுதியில் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார்கள்‌‌. அப்பகுதியில் கருப்பட்டி பிரசித்தி பெற்றதால் வெளிநபர் கருப்பட்டி வியாபாரம் செய்து வருவதை பார்த்த வியாபாரிகள் கருப்பட்டியை பார்த்தபோது அது முற்றிலும் கலப்படம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து 450 கிலோ கலப்பட கருப்பட்டி பறிமுதல் செய்யப்பட்டு வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் குடோனில் வைக்கப்பட்டது. இதன்பின் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியின் உத்தரவின்படி விளாத்திகுளம் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் மேற்பார்வையில் கடலில் கரைத்து 450 கிலோ கருப்பட்டி அழிக்கப்பட்டது.

 

Categories

Tech |