Categories
மாநில செய்திகள்

“பாப்பான் வீட்டில் பிச்சை எடுக்க கூட போவான்”…. ரஜினியை மோசமாக விமர்சித்த தீவிர ரசிகர்….. பரபரப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தற்போது ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டாராகவே பலம் வருகிறார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வர போவதாக அறிவித்தார். கலைஞர் கருணாநிதி மற்றும் அம்மா ஜெயலலிதா ஆகியோர் இறந்த பிறகு தமிழகத்தின் அரசியலில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் எனவும் ரஜினி கூறினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ரஜினி எப்போது தேர்தலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவியது.

அந்த சமயத்தில் ரஜினி நான் எப்போ வருவேன். எப்போது வருவேன் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்ற தன்னுடைய பட டயலாக்கை கூறினார். ஆனால் தன்னுடைய உடல் நலத்தை காரணம் காட்டி திடீரென ரஜினி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் ரஜினி மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்களும் வேறு கட்சிகளில் இணைய ஆரம்பித்தனர். இந்நிலையில் அரசியலில் இணைய மாட்டேன் என்று ரஜினி கூறினாலும், தமிழக ஆளுநரை சந்தித்து அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் ரஜினி தன்னுடைய பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். ஒருவேளை படத்தின் ப்ரோமோஷனாக தான் ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போது எல்லாம் அரசியல் குறித்து பேசுகிறாரோ என்று பலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் இதையெல்லாம் ரஜினி கண்டு கொள்வதே கிடையாது. இந்த சூழ்நிலையில் ரஜினி மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதனால் ரஜினி பாஜகவுக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்து வருகிறாரோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்திலும், அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான திராவிட ஜீவா அவரை விமர்சித்து ஒரு முகநூல் பதிவை வெளியிட்டது தற்போது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசியலிலும் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது திராவிட ஜீவாவின் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, இல. கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலனின் சதாபிஷேக விழாவில் ரஜினிகாந்த்!. பாப்பான் வீட்டில் பிச்சை எடுக்க கூட போவான். பல வருடங்கள் உயிரைக் கொடுத்து காத்திருக்கும் ரசிகனை வீட்டிற்குள் கூட சேர்க்க மாட்டான். ஆனாலும் இவனை ரசிக்க முடிகிறது என்பதுதான் காலக்கொடுமை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Categories

Tech |