Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்கின் முடிவு மாறியது…. ட்விட்டரில் வெளியான மறு அறிவிப்பு…!!!

பிரிட்டனின் புதிய பிரதமர் சர்வதேச பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தை மாற்றி கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பிரிட்டன் நாட்டின் தற்போதைய பிரதமரான ரிஷி சுனக் தன் ட்விட்டர் பக்கத்தில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களை செய்யாமல் இருந்தால் அதிக காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி இருக்காது. புதுப்பிக்கக்கூடிய எரிபொருள்களில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் எரிசக்தி தன்னிறைவை அடையாது.

இதனால் தான் அடுத்த வாரத்தில் நடக்க உள்ள பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளேன். பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை கொண்ட வருங்காலத்தை ஏற்படுத்தும் கொள்கையை முன்னேற்ற மாநாட்டில் நான் பங்கேற்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பாக எகிப்து நாட்டில் நடக்க உள்ள ஐ.நா பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டிருந்தது.

ஏனென்றால், இம்மாதம் 17 ம் தேதி முடிவதற்குள் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் தான் அவரின் கவனம் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கடும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அதில் கலந்துகொள்ளப்போவதாக அடுத்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Categories

Tech |