Categories
Uncategorized

சமூக வலைதளங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு … நெட்டிசன்கள் அதிர்ச்சி!

பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார்.

இதனால் பிரதமர் நரேந்திர மோடியை பலர் ஃபாலோ செய்து வந்தனர். சுமார் 53 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலேயே அதிக ஃபாலோவர்கள் கொண்ட பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேற யோசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டால் அவரை டுவிட்டர் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் ஃபாலோயர்களாக இருக்கும் கோடிக்கணக்கான ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது அறிவிப்பை தொடர்ந்து பலர் ‘ட்விட்டரை விட்டு போகாதீங்க மோடிஜீ’ என்றும், ‘மோடி வெளியேறிவிட்டால் நானும் வெளியேறிவிடுவேன்’ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி குறித்த ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. பிரதமர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இதனை அடுத்து இந்திய அளவில் Nosir என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி உள்ளது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் மட்டும் 54 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |