Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்கள் வணிகம் செய்பவரா….?? “இதனை” பெறுவது கட்டாயம்…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் எச்சரிக்கை….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உணவு பொருள் வணிகர்களுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்த கூடாது. இதனை அடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் மற்றும் குட்காவை வணிகர்கள் விற்பனைக்கு வைக்கவும், சாப்பிடும் உணவு பண்டங்களின் நிறத்தை அதிகரிக்க ரசாயன பவுடரை உபயோகிக்கவும் கூடாது. அதற்கு பதிலாக காஷ்மீர் வத்தல் பொடியை உபயோகப்படுத்தலாம்.

இதற்காக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வணிகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் பேக்கரி, இறைச்சி, மளிகை, ஹோட்டல், மீன் உள்ளிட்ட உணவு சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வணிகம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் கண்டிப்பாக உரிமம் பெற வேண்டியது அவசியம். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் விற்பனை சம்பந்தமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும், உரிமையாளர்களும் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |